இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை வெளிவிவகார அமைச்சில் வைத்து நேற்று (16/12) சந்தித்தார்.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினார்.
அத்துடன், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பரஸ்பர ஒத்துழைப்பு சார்ந்த விடயங்கள் மற்றும் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் அண்மைய இந்திய விஜயத்தின் விளைவுகள் தொடர்பான விடயங்கள் குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டது.