களனி ஆற்றை அண்மித்த வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஆற்றை அண்டிய பல இடங்களிலும் சூழல் மாசு ஏற்படுவதாகவும் ஆற்றை மாசுபடுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவவோருக்கு எதிராக கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நேற்று (16/12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், மிக முக்கியமாக களனி கங்ககையை அண்டிய பகுதிகளிலுள்ள குடியிருப்புகளின் காரணமாக, களனி கங்கை அதிகம் மாசுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
களனி ஆற்றில் கழிவுகள் கலக்கும் சுமார் 1,474 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான ‘சுரகிமு கங்கா’ என்ற திட்டத்தின் கீழ் 200 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு ஆற்றை அண்டிய வீடுகள் அகற்றப்பட்டு, அப்பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டு கழிவகற்றும் திட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.