அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு, குறைந்தப்பட்சம் 25 மில்லியன் டெலர் நிதியை இன்றுக்குள் பெற்றுக் கொடுக்காவிட்டால் பண்டிகை காலத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்க முடியாமல் போகுமென வர்த்தக அமைச்சுக்கு இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனா்.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் இறக்குமதியாளர்களுக்கு இடையில் நேற்று (16/12) அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அரிசி, பருப்பு, உருளைக்கிழங்கு, சீனி போன்ற அத்தியாவசிய பொருட்கள் இவ்வாறு தேங்கியுள்ள கொள்கலன்களில் உள்ளன.

இந்த உணவுப் பெருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்காக டொலர் பற்றாக்குறையின் காரணமாக தொடர்ந்தும் கொள்கலன்கைள தேக்கிவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், உருளைக் கிழங்கு , பெரிய வெங்காயம் என்பன பழுதடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளா்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு

Social Share

Leave a Reply