பயிரிடப்படாத அனைத்து பயிர் நிலங்களிலும் தென்னைச் செய்கையை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது தென்னை மரக்கன்றுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் தலா 1000 ரூபாய் செலவில் தென்னை கன்றுகளை நடுவதற்கான சுற்று நிருபம் விரைவில் வெளியிடப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பெருந்தோட்ட அமைச்சின் கீழ் இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஏனைய சகல அமைச்சுக்களும் ஆதரவு வழங்க வேண்டுமென நிதியமைச்சர் கோரிக்கை விடுத்திருந்ததாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
