LPL முதல் சுற்று நிறைவு

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நிறைவடைவந்துள்ளன. அதனடிப்படையில் ஜப்னா கிங்ஸ், கோல் கிளாடியேட்டர்ஸ், ஆகிய அணிகள் முதலாவது தெரிவுகாண் போட்டியில் மோதவுள்ளன. தம்புள்ள ஜியன்ட்ஸ், கொழும்பு ஸ்டார்ஸ் ஆகிய அணிகள் வெளியேற்று போட்டியில் விளையாடவுள்ளன.

லங்கா பிரீமியர் லீக் தொடரில் நேற்று (17/12/2021) முதற் போட்டியாக காலி மற்றும் யாழ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி கிளாடியேட்டர்ஸ் அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய காலி கிளாடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களை பெற்றது. இதில் பானுக்க ராஜபக்ஷ 23(25) ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் வஹாப் ரியாஸ், பிரவீன் ஜெயவிக்ரம, விஜயகாந்த் வியஸ்காந்த் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

130 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 109 ஓட்டங்களை பெற்றது. இதில் சொஹைப் மலிக் 23 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் சமிட் பட்டேல், நூர் அஹமட் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இரண்டாவது போட்டியில் வெற்றி பெறும் அணி முதல் நான்கு அணிகளிக்குள் தெரிவாகும் என்ற நிலையில் கொழும்பு ஸ்டார்ஸ் அணி, கண்டி வொரியேர்ஸ் அணியினை வெற்றி பெற்று அடுத்து சுற்றுக்கு தெரிவானது.
முதலில் துடிப்பாடிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 182 ஓட்டங்களை பெற்றது. இதில் குசல் பெரேரா 58 ஓட்டங்களையும், டினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களையும், தனஞ்செய டி சில்வா 40 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நிமேஷ் விமுக்தி 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பாடிய கண்டி வொரியேர்ஸ் அணி 17 ஓவர்களில் சகல விக்கெட்க்ளையும் இழந்து 124 ஓட்டங்களை பெற்றது. இதில் ரவி போப்பரா 47 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்துவீச்சில் ஜெப்ரி வன்டர்சாய் 6 விக்கெட்களை கைப்பற்றினார். 20-20 போட்டிகளில் இலங்கை சார்பாக பெறப்பட்ட இரண்டாவது சிறந்த பெறுதி ஆகும். லசித் மாலிங்க 6 விக்ட்களை மெல்பேர்ன் ஸ்டார் அணிக்கெதிராக பெற்றுள்ளார். 20-20 போட்டிகளின் சிறந்த பந்துவீச்சு பெறுதியினை லீஸ்டர்செயார் பிராந்திய அணிக்காக கொலின் எக்கர்மன் பெற்றுள்ளார்.

LPL முதல் சுற்று நிறைவு

Social Share

Leave a Reply