அநுராதபுரத்தில் உள்ள ஓயாமடுவ ஏற்றுமதி வலயத்தில் மருந்தக உற்பத்திகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் நோக்கில் கைத்தொழில் வலயமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் கைத்தொழில் வலய தொழிற்சாலைகளை அமைப்பதற்காக முதலீட்டாளர்களுக்கு காணிகளை வழங்குவது குறித்து அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன மற்றும் இராஜாங்க அமைச்சர் ஜயசுமன ஆகியோர் நேற்று முன்தினம் (16/12) குறித்த முதலீட்டாளர்களுடன் முதலீட்டாளர் தேர்வொன்றில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
குறித்த முதலீட்டாளர்களின் தேர்வானது, உயர் அதிகாரிகள் குழுவால் மிகவும் வெளிப்படையான முறையில் நடத்தப்பட்டதாகவும், இக்கைத்தொழிற்சாலை மூலமாக 7,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்குவதற்கும், திட்டத்திற்கான ஆரம்ப கட்டத்தில் மதிப்பிடப்பட்ட செலவு ரூ. 28 பில்லியன் என்றும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்தார்.