இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர்

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவரை நியமிக்க அமெரிக்க செனட்சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமெரிக்கா ஜனாதிபதி வெளிநாட்டு இராஜதந்திரிகளை நியமிக்கும் பெயர்களை செனட் சபைக்கு பரிந்துரை செய்திருந்த நிலையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவினை பிறப்பிடமாக கொண்ட, அமெரிக்க பிரஜையான ஜூலி சுங் இலங்கைக்கான புதிய தூதுவராக பதவிகளை பொறுப்பேற்கவுள்ளார். அமெரிக்காவின் முக்கிய இராஜதந்திர பதவிகளை 49 வயதான ஜூலி சுங் வகித்துள்ளார். இறுதியாக ஜப்பான் விவகாரங்களுக்கான அலுவலகத்தின் பணிப்பாளராக இவர் கடமையாற்றியுளார்.

இந்து சமுத்திரத்தின் கடல் போக்குவரத்தில் இலங்கை முக்கியத்துவமான இடத்தில காணப்படுவதாகவும், அதில் காணப்படும் சர்ச்சையான துறைமுகம் மற்றும் போக்குவரத்துக்கு ஒழுங்குகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் தொடர்பில் செனட் சபைக்கு விளக்கமளித்துள்ளார்.

இந்த விடயம் அவர் நியமிக்கப்படுவத்ற்கு முக்கியமனா காரணமாக அமைவதோடு, இலங்கை அமரிக்கா நாடுகளுக்கான உறவினை மேலும் மேம்படுத்துவதின் முக்கியத்துவம் தொடர்பாகவும் இவர் முன்வைத்த கருத்துக்கள் இவர் நியமிக்கப்பட காரணமாக அமைந்துள்ளது.

இலங்கையின் தற்கால சூழ்நிலை, அரசியல் நகர்வுகள் எனபனவற்றில் இவரின் பங்கு மிக முக்கியமானதாக அமையும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

பல விருதுகளையும், கெளவரங்களையும் பெற்றுள்ள ஜூலி சுங் பல நாடுகளில் தூதரங்களிலும், வெளிநாடுகள் சம்மந்தப்பட்ட பதவிகளையும் வகித்துள்ளமை சுட்டிக்காட்த்தக்கது.

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர்

Social Share

Leave a Reply