14 வயது சிறுமி தகப்பனால் அடித்துக் கொலை

தந்தை மற்றும் மாமாவின் தாக்குதலுக்கு இலக்காகி, 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவமொன்று கம்பளையில் பதிவாகியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (19/12) கம்பளையிலுள்ள மலைக்கோயில் ஒன்றில் வைத்து, காதலனுடன் சிறுமியை பார்த்த அச்சிறுமியின் மாமா, சிறுமியை தாக்கியதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று (21/12) காலை, சிறுமி சுகயீனமுற்ற நிலையில், வலியால் புலம்பியபோது, சிறுமியின் தந்தை அவரை தூங்க விடமாட்டேன் எனக்கூறி தாக்கியுள்ளார்.

பின்னர் சிறுமியை அவரது தாயார் அருகிலுள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்றிருந்த நிலையில், உடல் நிலை மோசமானதன் காரணத்தினால் அவர் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தந்தை மற்றும் மாமாவை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

14 வயது சிறுமி தகப்பனால் அடித்துக் கொலை

Social Share

Leave a Reply