தினசரி 45 நிமிடங்களுக்கு மின்வெட்டு

நுரைச்சோலை மின் நிலைய மின்பிறப்பாக்கியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நாளொன்றுக்கு 45 நிமிடங்களுக்கு மின்வெட்டை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

மின் மிறப்பாக்கியின் மீள் திருத்த பணிகள் நிறைவடைந்து இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் சில தினங்களுக்கு இந்த மின்வெட்டு அமுலில் இருக்குமெனவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி மாலை 6.00 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் இந்த மின்வெட்டு முன்னெடுக்கப்படவுள்ளது.

இவ்வாறு செயலிழந்துள்ள மின் பிறப்பாக்கியில் தொடர்ந்து எண்ணெய் கசிவு ஏற்படுமென மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமார மானவடு தெரிவித்துள்ளாா்.

இன்னும் 5 – 6 வருடங்களுக்கும் நுரைச்சோலை இயந்திரத்தில் இவ்வாறு கோளாறு ஏற்படலாம் என்றும், அதனை நிறுத்த முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தினசரி 45 நிமிடங்களுக்கு மின்வெட்டு

Social Share

Leave a Reply