சுனாமி பேரழிவின் 17ஆவது ஆண்டு நினைவு தினம்

சுமார் 280,000 மக்களைப் பலிகொண்ட 2004 சுனாமி பேரழிவின் 17ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (26/12) அனுசரிக்கப்படுகிறது.

இந்தோனேஷியாவின் சுமாத்திரா தீவு அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தால், எதிர்பாராத விதமாக சுனாமி பேரலை பேரழிவுக்கு ஆசிய நாடுகள் பல முகம் கொடுக்க நேரிட்டது.

இந்தோனேஷியா, தாய்லாந்து, இந்தியா மற்றும் இலங்கை உட்பட 14 நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இலங்கையில் பதிவாகிய உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 35,000 ஐ நெருங்கியது.அவர்களில் சுமார் 2,000 பேர் உலகின் மிக மோசமான புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அத்துடன் 5,000 பேர் வரை காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த அமைச்சரவையில் டிசம்பர் 26ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஆண்டுதோறும் காலையில் இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

சுனாமி பேரழிவின் 17ஆவது ஆண்டு நினைவு தினம்

Social Share

Leave a Reply