இன்று இடம்பெற்ற தீர்மானமிக்க கலந்துரையாடலில் உறுதியான தீர்மானம் ஒன்று வழங்கப்படாமையின் காரணமாக, நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தீர்மானித்துள்ளனர்.
புகையிரத திணைக்கள பொது முகாமையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் முடிந்தமையின் காரணமாகவே, தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
முந்திய செய்தி
புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினருக்கும் புகையிரத திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (27/12) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இக்கலந்துரையாடலானது தீர்மானமிக்க இறுதி கலந்துரையாடலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கமைய இன்று முற்பகல் 10 மணியளவில் கலந்துரையாடல் இடம்பெறுமென தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (26/12) நள்ளிரவு முதல் முன்னெடுக்கத் தீர்மானித்திருந்த தொழிற்சங்க போராட்டத்தினை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினர் பிற்போட்டிருந்தனர்.
எனினும், இன்றைய கலந்துரையாடலில் தீர்மானமிக்க முடிவு எட்டப்படாவிடில் உடனடியாக தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.