எரிவாயு நிறுவனங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை

சமையல் எரிவாயு சிலிண்டர்களிலும் ஏற்கனவே உள்ள அடைப்பான்களை (Valve) மாற்றி புதிய அடைப்பான்களை பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லசந்த அழகியவன்னவுடன் நேற்று (29/12) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் சமையல் எரிவாயு நிறுவனங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

சமையல் எரிவாயு சிலிண்டர்களில் புதிய அடைப்பான்களை பொருத்தும் நடவடிக்கைகள் காரணமாகவே, தற்போது சந்தையில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குறித்த எரிவாயு நிறுவனங்கள் சுட்டிக்காட்டின.

எவ்வாறாயினும், எரிவாயு சிலிண்டர்களை நுகர்வோருக்கு விரைவில் விநியோகிக்குமாறு, நுகர்வோர் விவகார அதிகார சபை, இரண்டு நிறுவனங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

அத்துடன், எதிர்காலத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவை பரிசோதிக்க இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் வழிமுறைகள் குறித்தும் நேற்று கலந்துரையாடப்பட்டது.

எரிவாயு நிறுவனங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை

Social Share

Leave a Reply