இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேசப் போட்டி தொடருக்கான அணி தலைவராக லோகேஷ் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். உபதலைவராக ஜஸ்பிரிட் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்கா அணியுடனான தொடரிலிருந்து இந்தியா அணியின் மட்டுப்படுத்தபட்ட ஓவர்கள் போட்டிகளுக்கான முழு நேர தலைவராக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். அவர் முழுமையான தலைவர் பதவியினை பெற்று முதல் தொடரிலேயே உபாதை காரணமாக தலைவர் பதவியினை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உபாதை காரணமாக டெஸ்ட் தொடரில் வாய்ப்பை இழந்தார் ரோஹித். இந்த நிலையில் ஒரு நாள் சர்வதேச போட்டிகளுக்கான அணியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
ரவிச்சந்திரன் அஷ்வின் மீண்டும் ஒரு நாள் சர்வதேசப் போட்டி அணியில் இணைக்கப்பட்டுள்ளார். கடந்த வருடங்களாக இவர் ஒரு நாள் அணியில் சேர்க்கப்படவில்லை. வெங்கடேஷ் ஐயர் ஒரு நாள் அணிக்குள் உள் வாங்கப்பட்டுளார்.
அணி விபரம்
லோகேஷ் ராகுல், ஜஸ்பிரிட் பும்ரா, ஷிகர் தவான், ருத்ராஜ் கெய்க்வூட், விராத் கோலி, சூரியகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷாப் பான்ட், இஷன் கிஷன், ரவிச்சந்திரன் அஷ்வின், வொஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், தீபக் ஷகார், ஷர்தூல் தாகூர், பிரசித் கிருஷ்ணா, மொஹமட் சிராஜ், யுஸ்வேந்திரா ஷகால்.
