‘ஒன்றிணைந்து சவால்களை எதிர்கொள்வோம்’ – அமைச்சர் டக்ளஸ்

கடந்த காலங்களில் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றதைப் போன்று எதிர்காலத்திலும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு சவால்களில் வெற்றியடைய வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகளை புதிய ஆண்டில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்துரையாற்றுகையில், ‘இவ்வருடத்தில் எல்லோரும் இணைந்து கடந்த வருடத்தைப் போலவே, அமைச்சின் பொறுப்புக்களையும் – கடமைகளையும் விரைந்து செயற்படுத்த வேண்டும். இதன்மூலம், எம்மத்தியில் காணப்படுகின்ற சவால்களை வெற்றிகொள்வது மாத்திரமன்றி, எமது பயணத்தில் எதிர்கொள்ளுகின்ற சவால்களையும் வெற்றி கொள்ள வேண்டும்.

எமது ஜனாதிபதியின் சபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக, ஜனாதிபதி தலைமையில் பிரதமரின் பக்கத் துணையுடன் எமது பொறுப்புக்களை நாம் முன்னெடுக்க வேண்டும். அந்தவகையில் இதுவரை காலமும் இந்த அமைச்சை முன்னெடுப்பதற்கு அனைவரும் வழங்கி வரும் ஒத்துழைப்பினை நான் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன்’ எனத் தெரிவித்தார்.

'ஒன்றிணைந்து சவால்களை எதிர்கொள்வோம்' - அமைச்சர் டக்ளஸ்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version