நாரம்மல பிரதேசத்திலுள்ள அரச வங்கியொன்றில் துப்பாக்கி வெடித்ததில் பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த வங்கியில் கடமையாற்றும் பாதுகாப்பு காவலரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் இச்சம்பம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் காயமடைந்த பெண் குருநாகல் வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் குறித்த பாதுகாப்பு காவலரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.