தெஹிவளை கடலில் நபரொருவர் முதலைக் கடிக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
அலங்கார மீன்பிடியில் ஈடுபட்டு வரும் 57 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் நீர் சாகசங்களில் ஈடுபட்டு வருபவர் என்பதுடன், அவரது சடலம் கொழும்பு – தெற்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
