வாரியபொல பிரதேச சபை தவிசாளர் பதவி நீக்கம்

வாரியபொல பிரதேச சபையின் தவிசாளர் திலகரத்ன பண்டார திஸாநாயக்க பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான வர்த்தமானி அறிவித்தலை வடமேல் மாகாண ஆளுநர் வசந்த கரன்னகொட வெளியிட்டுள்ளார்.

வாரியபொல பிரதேச சபைத் தவிசாளர் திலகரத்ன பண்டார மீது சுமத்தப்பட்டிருந்த குறிப்பிட்ட சில குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகளுக்கு அமைவாக, அவரை பதவி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசந்த கரன்னகொட வடமேல் ஆளுநராக பதவியேற்றதன் பின்னர் ஆளுநருக்கு இருக்கும் விசேட அதிகாரத்தை பயன்படுத்தி பதவி நீக்கம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

வாரியபொல பிரதேச சபை தவிசாளர் பதவி நீக்கம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version