பல்வேறு பகுதிகளில் 17 முச்சக்கர வண்டிகள் திருட்டு

கனேமுல்ல பிரதேசத்தில் முச்சக்கர வண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வரை மஹபாகே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 20 தொடக்கம் 30 வயதுக்குட்பட்டவர்களெனவும், கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் மேல் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட 17 முச்சக்கர வண்டிகளில், 12 முச்சக்கர வண்டிகளும் மற்றும் 5 முச்சக்கர வண்டிகளின் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன.

முச்சக்கர வண்டிகளின் இயந்திர இலக்கங்கள் மற்றும் சேஸ் இலக்கங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகநபர்கள் ராகம, மஹாபாகே, வத்தளை, ஜா-எல, கந்தானை, பேலியகொட மற்றும் கிராண்ட்பாஸ் ஆகிய பகுதிகளில் இருந்து முச்சக்கர வண்டிகளை திருடியுள்ளதாக தெரவித்தனர்.

இந்நிலையில், குறித்த சந்தேகநபர்கள் நேற்று (04/01) வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்ததற்கு அமைய, 72 மணித்தியாலங்கள் வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு பகுதிகளில் 17 முச்சக்கர வண்டிகள் திருட்டு

Social Share

Leave a Reply