எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை கட்டாயம் அதிகரிக்கும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் பரவலின் அச்சுறுத்தல் மற்றும் விடுமுறை காலங்களில் மக்களின் கவனக்குறைவான செயற்பாடுகள் காரணமாக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், நாடு முழுவதும் பல பகுதிகளில் இருந்து ஒமிக்ரொன் நோயாளர்கள் கண்டறியப்பட்டமை முழு நாட்டுக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொதுமக்கள் ஒமிக்ரொன் பரவலை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது அண்மைக்கால விடுமுறை நாட்களில் மக்களின் நடமாட்டங்களில் இருந்து தெரியவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.