தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதை கட்டாயப்படுத்த முடியாத போதிலும், பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டையை கொண்டு செல்வதை கட்டாயப்படுத்த நடவடிக்கை விரைவில் எடுக்கப்படுமென, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்துடன் நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அதுதொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ‘பொது இடங்களுக்குச் செல்லும் போது கொவிட் தடுப்பூசி அட்டையைக் கொண்டு செல்வதை கட்டாயமாக்கும் செயற்பாட்டுக்கான தொழிநுட்ப செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய QR குறியீடு மற்றும் செயலி ஆகியவற்றை கையடக்க தொலைபேசியில் பதிவிறக்கம் செய்வதற்கான தொழிநுட்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதை கட்டாயப்படுத்த முடியாத போதிலும், பொது இடங்களுக்குச் செல்லும் போது தடுப்பூசி அட்டையை கொண்டு செல்வதை கட்டாயப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும்.
அதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உலகின் பல நாடுகளும் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன’ என அமைச்சர் தெரிவித்தார்.