தென் ஆபிரிக்கா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்களினால் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது.
ஜொஹாநெஸ்பேர்க் இல் நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பாடிய இந்தியா அணி சகல விக்கெட்களையும் இழந்து 202 ஓட்டங்களை பெற்றது. இதில் லோகேஷ் ராகுல் 50(133) ஓட்டங்களையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 46(50) ஓட்டங்களையும், மயங் அகர்வால் 26(37) ஓட்டங்களையும், ஹனுமா விஹாரி 20(53) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மார்கோ ஜென்சென் 4 விக்கெட்களையும், டுவான் ஒலிவேர், ககிஸோ றபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பாடிய தென் ஆபிரிக்கா அணி சகல விக்கெட்களையும் இழந்து 229 ஓட்டங்களை பெற்றது. இதில் கீகன் பீட்டர்சன் 62(118) ஓட்டங்களையும், ரெம்பா பவுமா 51(60) ஒட்டங்களையும், டீன் அல்கர் 28(120) ஓட்டங்களையும், கேஷவ் மஹாராஜ் 21(29) ஓட்டங்களையும், மார்கோ ஜென்சென் 21(34) ஓட்டங்களையும், கைய்ல் வெர்ரெய்ன் 21(72) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஷர்டுல் தாகூர் 7 விக்கெட்களையும், மொஹமட் ஷமி 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
இரண்டாவது இன்னிங்ஸ்சில் துடுப்பாடிய இந்தியா அணி சகல விக்கெட்களையும் இழந்து 266 ஓட்டங்களை பெற்றது. இதில் அஜிங்கய ரஹானே 58(78) ஓட்டங்களையும், செட்டேஸ்வர் புஜாரா 53(86) ஓட்டங்களையும், ஹனுமா விஹாரி ஆட்டமிழக்காமல் 40(84) ஓட்டங்களையும், ஷர்டுல் தாகூர் 28(24) ஓட்டங்களையும், மயங் அகர்வால் 23(37) ஓட்டங்களையும், பெற்றனர். பந்துவீச்சில் ககிஸோ றபாடா, லுங்கி நிகிடி, மார்கோ ஜென்சென் ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
240 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பாடிய தென் ஆபிரிக்கா அணி 3 விக்கெட்களை இழந்து 243 ஓட்டங்களை பெற்றது. இதில் டீன் அல்கார் ஆட்டமிழக்காமல் 96(188) ஓட்டங்களையும், ராசி வன் டெர் டுசென் 40 (9) ஓட்டங்களையும், எய்டன் மார்க்ராம் 31(38) ஓட்டங்களையும் பெற்றனர்.
டீன் அல்கர் போட்டியின் நாயகனாக தெரிவு செய்யப்பட்டார். மூன்றாவதும்,இறுதியுமான போட்டி 11 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
வி. பிரவிக்
தரம் – 03