கோதுமை மா பற்றாக்குறையின் காரணமாக எதிர்வரும் நாட்களில் பாண் உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்படுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் என்.கே ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
கோதுமை மா பற்றாக்குறை பிரச்சினை குறித்து அரசாங்கம் உரிய தீர்வு வழங்காதுவிடில், பொதுமக்கள் பாணை பெற்றுக் கொள்வதற்கும் வரிசையில் நிற்க வேண்டி ஏற்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கோதுமை மா பற்றாக்குறையின் காரணமாக பேக்கரி உற்பத்தியாளர்கள் வாரத்திற்கு 3 அல்லது 4 நாட்கள் மாத்திரமே பணி புரிவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.