இன்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்ட தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியது. இதில் இலங்கை தொடர்பில் வாய்மூல அறிக்கையினை மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பற்றினால் வெளியிடடார்.
இந்த அறிக்கையில் ஐ.நாவின் உறுப்பு நாடுகள் இலங்கை தொடர்பில் நெருக்கமாக உற்றுநோக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
மனித உரிமைகளில் நம்பகரமான முன்னேற்றம், பொறுப்புகூறல், நல்லிணக்கம் போன்றவற்றிலேயே உற்றுநோக்குமாறு அவர் கூறியுள்ளார். அத்தோடு காணாமல் போனோர் அலுவலகம் வெளிப்படையாக செயற்படவேண்டுமெனவும், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் செயற்பாடுகள் வேகப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கையில் அண்மையில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டமை, இராணுவம் நிர்வாகத்துக்குள் அதிகம் உள்வாங்க்கப்படுகின்றமை, மனித உரிமை செயற்பாட்டாளர்கள், காணாமல் போனோரின் குடும்பங்கள், ஊடகவியலாளர்கள், வைத்திய அதிகாரிகள், மாணவர்கள் போன்றோரை அடக்கு முறை செய்தல் தொடர்பில், அதிருப்தியை வெளியிட்டார்.
