நவீன தொழில்நுட்பமும் திறன்களும் நிறைந்த எதிர்கால தலைமுறை பிள்ளைகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் நவீன கருத்தாக்கமான, இலத்திரனியல் கணினி திரைகள் மற்றும் கணினி நன்கொடை பைலட் திட்டத்தின் ‘சக்வல’ திட்டம் இன்று (10/01) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நாட்டின் பிள்ளைகள் எதிர்கால உலகில் உயர்ந்த நிலையை எட்ட ‘கணினி தொழிநுட்ப போர்டுகள்’ மற்றும் நவீன கணினிகளை நன்கொடையாக வழங்கும் இத்திட்டத்தின் கீழ், 750,000 ரூபாய் பெறுமதியான டிஜிட்டல் கணினி திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை பரந்தன் இந்து வித்தியாலயத்திற்கு இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவினால் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.


