எதிர்வரும் வாரம் ஜனாதிபதி சிம்மாசன உரையாற்றுவார்

புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரை ஆரம்பித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 18 ஆம் திகதி தனது சிம்மாசன உரையை நிகழ்த்தவுள்ளார்.

ஜனாதிபதியின் சிம்மாசன உரை தொடர்பில் எதிர்வரும் 19, 20 ஆம் திகதிகளில் ஒத்திவைப்புவேளை விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகரின் தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்களுக்கான கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியால் எதிர்வரும் 18 ஆம் திகதி நடத்தப்படவுள்ள சிம்மாசன உரை தொடர்பில் விவாதம் நடத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்திருந்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கடிதம் மூலம் அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி பாராளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதியால் நிறைவு செய்யப்பட்டதையடுத்து, எதிர்வரும் 18 ஆம் திகதி புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் வாரம் ஜனாதிபதி சிம்மாசன உரையாற்றுவார்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version