தேவாலயத்தில் கைக்குண்டை வைத்தவர் பிடிபட்டார்

நேற்றைய தினம் கொழும்பு,பொரளையிலுள்ள தேவாலயத்தில் கை குண்டு கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் 13 வயதுடைய சிறுவன் ஒருவனே அந்த கை குண்டை தேவாலயத்தில் வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த தேவாலயத்தில் வேலை செய்த நபர் ஒருவரே அந்த சிறுவனிடம் கை குண்டை கொடுத்து வைக்க சொல்லியுள்ளார். அந்த சிறுவன் தொடர்ச்சியாக தேவாலயத்திற்கு செல்லும், தேவாயலத்துக்கு அருகில் வசிப்பவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன் இன்று நீதிமன்றத்தில் முன்னிலை செய்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மிகுதியான நால்வரும் நாளை நீதிமன்றில் முன்னிலை செய்யப்படவுள்ளனர்.

தேவாலயத்தில் கைக்குண்டை வைத்தவர் பிடிபட்டார்
Photo Credit – Ada Derana

Social Share

Leave a Reply