நாட்டரிசி ஒரு கிலோகிராம் 100 ரூபாவுக்கு குறைவாகவும், சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 130 ரூபாவுக்கு குறைவாகவும் வழங்கப்படும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து சதோச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட அரசாங்க விற்பனை நிலையங்களினூடாக, இந்த நிவாரண விலை அடிப்படையில் அரிசியை பொது மக்களால் கொள்வனவு செய்ய முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
