இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 3 ஆயிரம் மெட்ரிக் டொன் டீசலை வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறு டீசல் வழங்கப்படும் நிலையில், மின் விநியோகத் தடையினை ஓரளவு கட்டுப்படுத்த முடியுமென இலங்கை மின்சார சபையின் தெரிவித்துள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி நிலையங்களில் பல மின் பிறப்பாக்கி இயந்திரங்கள் செயலிழந்துள்ளதன் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று (13/01) பிற்பகல் முதல் மின் விநியோகத்தடை ஏற்பட்டிருந்தது.
தேசிய மின் கட்டமைப்பில் 300 மெகாவோட் மின் பற்றாக்குறை காரணமாக இவ்வாறு மின் விநியோகத்தடை ஏற்பட்டதாக மின்சார சபை தெரிவித்திருந்தது.
அத்துடன், எரிபொருள் நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் மின்சார நெருக்கடி மேலும் அதிகரிக்கலாமெனவும், விடுமுறை நாட்கள் என்பதினால் மின் தேவை குறையும் போது நிலைமை வழமைக்கு திரும்பும் வாய்ப்புகள் உள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ரு நவமணி தெரிவித்துள்ளார்.
