ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நம் கலாச்சாரம். ஆனால் ஏன் திரௌபதிக்கு ஐந்து கணவர்கள்?

புராணத்தை சற்று தள்ளி வைத்து பார்த்தால், அக்காலத்தில் ஒரு பெண் பல கணவர்களை மணந்து கொள்ளும் பழக்கத்தையும், ஒரு ஆண் பல பெண்களை மணந்து கொள்ளும் பழக்கத்தையும் நாம் ஒதுக்கி விட முடியாது. திரௌபதி விஷயத்தில், அதாவது ஒரு பெண் பல ஆண்களை மணப்பதற்கான காரணம் பற்றி நான் வாசித்தறிந்த கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

திரௌபதியின் காலத்தில் மணப்பெண்களின் எண்ணிக்கைகள் குறைவாக இருந்த காரணத்தினால் திரௌபதி ஐந்து ஆண்களை திருமணம் செய்ததற்கான வாய்ப்புகள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

நிஜத்தில் இன்றைய காலகட்டத்தில், யாழப்பாண மாப்பிள்ளைகள் தட்டுப்பாடு என்ற காரணத்தினால் ஒரு ஆண் பல தாரங்களுடையவனாக இருந்தால்தான் இந்தச் சிக்கலான நிலை மாறலாம் என்றிருக்கின்றது. உள்நாட்டுப் போரில் பல ஆண்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டதும், எஞ்சியவர்களில் ஒரு சாரார், வெளி நாடுகளுக்கு ஓடி விட்டதுமே காரணம்.

தன்னுடைய பூர்வ ஜென்மத்தில் ஒரு துறவிக்கு மகளாக பிறந்தார் திரௌபதி. தனக்கு திருமணமாகாத காரணத்தினால் அவர் வருத்தமாக இருந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் சிவபெருமானை நினைத்து கடுமையான தவத்தில் ஈடுபட்டார்.

பல வருட தவத்திற்கு பின்னர் மனம் குளிர்ந்த சிவபெருமான், அவர் முன் தோன்றி அவருக்கு வரம் ஒன்றை அளித்தார். ஐந்து குணங்கள் அடங்கிய கணவனை அவர் வரமாக கேட்டார்.தன் கணவனுக்கு ஐந்து குணங்கள் இருக்க வேண்டும் என திரௌபதி கேட்டார். முதல் குணம் – ஒழுக்க நெறியுடன் வாழ்பவர். இரண்டாவது – வீரம் நிறைந்தவராக இருத்தல். மூன்றாவது – அழகிய தோற்றத்துடன் கூடிய ஆண்மகன். நான்காவது – அறிவாளியாக இருத்தல். ஐந்தாவது – அன்பும் பாசமும் கொண்டவராக இருத்தல்.

சற்று நேரம் சிந்தித்த சிவபெருமான், இந்த ஐந்து குணங்களும் ஒரே ஆணிடம் இருக்க சாத்தியமில்லை. அதனால் அடுத்த ஜென்மத்தில் இந்த ஐந்து குணங்களை தனித்தனியாக கொண்ட ஐந்து ஆண்களுக்கு மனைவியாகும் வரத்தை அவர் திரௌபதிக்கு அளித்தார். அதனால் அடுத்த ஜென்மத்தில் துருபத மகாராஜாவிற்கு அவர் மகளாக பிறந்த போது, ஐந்து சகோதரர்களை மணக்க வேண்டும் என ஏற்கனவே எழுதப்பட்ட விதியோடு தான் அவர் பிறந்தார்.

கதையை நம்பலாமோ இல்லையோ, வாசித்தறிந்த காரணம் இதுதான்!

-கற்பகசந்திரா-

ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நம் கலாச்சாரம். ஆனால் ஏன் திரௌபதிக்கு ஐந்து கணவர்கள்?

Social Share

Leave a Reply