நாடு மற்றுமொரு கொவிட் அலையில் சிக்க வாய்ப்பு – சுகாதார வைத்திய நிபுணர் குழு எச்சரிக்கை

நாடு வழமைக்குத் திரும்பினால் பாரிய கொவிட் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவேண்டிவருமென வைத்தியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை வைத்திய சங்கத்தின் தலைவரும் விசேட வைத்திய நிபுணருமான பத்மா சிரியாணி குணரத்ன, நாட்டில் தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொவிட் தொற்று நோயாளராக இனங்காணப்படு வதுடன், வாரமொன்றில்; ஆயிரக்கணக்கானோரின் கொவிட் மரணங்கள் சம்பவிக்கின்றன.

நாட்டில் தற்போது டெல்டா வைரசே அதிகரித்துள்ளது. நாடு இன்னமும் கொவிட் தொற்று எச்சரிக்கை மட்டத்திலிருந்து மீளவில்லை. இன்னமும் சிவப்பு எச்சரிக்கை மட்ட த்திலேயே எமது நாடு உள்ளது.

இந்த நிலைமைகளைக் கருத்தில் கொள்ளாது நாம் செயற்படுவோமானால் தென்னாபிரிக்க வைரஸ் தாக்கத்திற்கும் உட்பட்டு நாடு மிகவும் பாரிய ஆபத்து நிலமையை நோக்கிச் செல்ல அதிக வாய்ப்புள்ளது.

எனவே, அரசாங்கம் நாட்டினை மீளத் திறப்பதை தவிர்த்து, கொவிட் கட்டுப்பாட்டு செயலணி அதிகாரிகளுடன் இணைந்து நாட்டினை கொவிட் வைரஸிலிருந்து மீட்பதற்கான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு அமுல்ப்படுத்தவேண்டுமென தெரிவித்துள்ளார்.

நாடு மற்றுமொரு கொவிட் அலையில்  சிக்க வாய்ப்பு - சுகாதார வைத்திய நிபுணர் குழு எச்சரிக்கை

Social Share

Leave a Reply