நாட்டிற்கு வருகை தரவுள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள்

எதிர்வரும் வாரங்களில் வெளிநாட்டு பிரதிநிதிகள் சிலர் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில் பிரித்தானியா பிரதி வௌிவிவகார அமைச்சர், தென்கொரியாவின் சபாநாயகர், மற்றும் துருக்கி வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இவ்வாறு வருகைத் தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரித்தானியா பிரதி வௌிவிவகார அமைச்சர் நாளைய தினம் (18/01) நாட்டிற்கு வருகை தரவுள்ளதுடன் தென் கொரியாவின் சபாநாயகர் எதிர்வரும் 20ஆம் திகதி வருகை தரவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனிடையே இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மாலைத்தீவு சபாநாயகர் இன்று (17/01) பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்கு வருகை தரவுள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள்

Social Share

Leave a Reply