எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக களனிதிஸ்ஸ வளாகத்திலுள்ள அனைத்து அனல் மின் நிலையங்களும் இன்று (18/01) மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று மாலை 5 மணியளவில் குறித்த மின் நிலையங்கள் மூடப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பிரதான மின் கட்டமைப்பிலிருந்து களனிதிஸ்ஸ வளாகம் அகற்றப்படுமாயின், 300 மெகாவோட் திறன் இழக்கப்படும் என சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்துள்ளார்.
எனவே இன்று முதல் ஒன்றரை மணித்தியாலங்களுக்கும் மேலாக மின்வெட்டு இடம்பெறுமென, அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திட்டமிட்டப்படி இன்றைய தினம் சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதிய பொதுமுகாமையாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌம்ய குமாரவடு தெரிவித்துள்ளார்.