ரஜினியின் சமரச பேச்சு தோல்வியில் முடிந்தது

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா தனுஷை 18 வருட திருமண வாழ்க்கைக்கு பின் அவரை பிரிவதாக அறிவித்து இருந்தார்.

இதேபோல் ஐஸ்வர்யா தனுஷும் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களின் பிரிவு குறித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் கருத்துவேறுபாடு அதிகரித்ததால் விவாகரத்து செய்து கொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து ரஜினி இருவரிடமும் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். மேலும் தனுஷிடம் ரஜினிகாந்த செய்த சமரச முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது.

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் விட்டுக்கொடுக்காமல் அவர்களின் முடிவில் உறுதியாக இருந்துள்ளனர். இதனால் ரஜினியின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது என சினி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினியின் சமரச பேச்சு தோல்வியில் முடிந்தது

Social Share

Leave a Reply