IPL 2022 இன்று ஆரம்பம்

2022 ஆம் ஆண்டுக்கான IPL தொடர் இன்று இரவு 7.30 இற்கு மும்பை வங்கடே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. முதற் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.

2021 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் மோதிய அணிகள் இந்த போட்டியில் விளையாடவுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக ஷ்ரேயாஸ் ஐயரும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக ரவீந்திர ஜடேஜாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இம்முறை ஏழு அணிக்கு புதிய தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மட்டும் அவர்களின் தலைவர்களை மாற்றவில்லை.

2012 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினை வீழ்த்தியது. 2021 ஆம் ஆண்டு சென்னை சுப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினை வீழ்த்தியது.

கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் மோதிய அணிகளே இம்முறை முதற் போட்டியில் மோதும். இம்முறை IPL இல் 10 அணிகள் மோதவுள்ளன.

வி.பிரவிக்
தரம் – 04

IPL 2022 இன்று ஆரம்பம்

Social Share

Leave a Reply