KCA கிரிக்கெட் அக்கடமிக்கு முகாமைத்துவ பணிப்பாளம் நியமனம்

கொழும்பை மையப்படுத்தி இயங்கி வரும் கங்காரூ கிரிக்கெட் அக்கடமிக்கு முகாமைத்துவ பணிப்பாளராக திருமதி கோசலாதேவி முகாமைத்துவ பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே குறித்த அக்கடமியின் செயலாளராக கடமையாற்றி வந்தவர்.

கோசலாதேவி கடந்த காலங்களில் அக்கடமியின் மாணவர்களோடு சிறப்பாக செயற்பட்டதோடு, அவர்களை கண்காணித்து, அவர்களது பெற்றோருடனும் நல்ல உறவை பேணி வருகின்றார். அக்கடமியின் நிர்வாக செயற்பாடுகளையும் கவனித்து வருகின்றார். மாணவர்களின் பெறுபேறுகளை கண்காணித்து அவற்றை ஆவணப்படுத்தி அக்கடமியின் வளர்ச்சிக்கு பெரிதும் கைகொடுத்து வருகின்றார்.

இந்த செயற்பாடுகளின் அடிப்படையில் அவருக்கு பதவி உயர்வு வழங்கி அவரை முகாமைத்துவ பமணிப்பாளராக நியமித்துள்ளளதாக KCA கிரிக்கெட் அக்கடமி பணிப்பாளர் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

KCA கிரிக்கெட் அக்கடமி NCC உள்ளக அரங்கில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அக்கடமி மட்ட போட்டிகளிலும் KCA கிரிக்கெட் அக்கடமி மாணவர்கள் போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version