SJB வழங்கும் இலவச சட்ட உதவி

நாடு முழுவதும் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் இலவச சட்ட உதவி கிடைக்கும் என கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அதற்காக கட்சி அலுவலகம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதுதொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ‘தகுதியற்ற அரசாங்கத்தின் கீழுள்ள நாடு தரத்தை எதிர்பார்க்காது. ஆகையால் தரமற்ற ஆட்சியை அகற்ற வேண்டும்.

மேலும், தரம் குறைந்த உரத்தை கொண்டு நாடு பெரும் அழிவுக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், நாட்டின் பொருளாதாரமும் விவசாயிகளின் உயிரும் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது’ எனவும் சுட்டிக்காட்டினார்.

SJB வழங்கும்  இலவச சட்ட உதவி
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version