கனடாவில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகி பாதிக்கப்பட்ட தற்போதைய மற்றும் முன்னாள் ஆயுதப்படை உறுப்பினர்களிடம் , கனடாவின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்கள் மன்னிப்பு கோரியுள்ளனர்.
அண்மையில் தேசிய பாதுகாப்பு தலைமையகத்தில் இருந்து நேரலை வழியாக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில், பாலியல் துஷ்பிரயோகத்தை அனுபவித்த பல்லாயிரக்கணக்கான, தற்போதைய மற்றும் முன்னாள் ஆயுதப்படை உறுப்பினர்களுக்கு மத்திய அரசின் நிதியொதுக்கீட்டின் கீழ் 600 மில்லியன் கனேடிய டொலர்கள் இழப்பீடாக வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கமும் , இராணுவத் தலைமையும் , பாலியல் முறைகேடு குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்யத் தவறியதாக கேள்விகள் மற்றும் விமர்சனங்களை எதிர்கொண்டதால் இந்த மன்னிப்பு கோரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தலைமையில் 40 நிமிட மன்னிப்புக் கோரப்பட்டதுடன், ஒரு கட்டத்தில் இந்நேரலையை சுமார் 8,000 பேர் வரை பார்வையிட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.