கெப்டன் வருண் சிங்கும் உயிரிழந்தார்

இந்தியா – குன்னூர், நீலகிரி பிரதேசத்தில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி பெங்களூர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிருக்குப்போராடி வந்த கெப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் இன்று காலை (15/12) உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஹெலி விபத்தின் போது சம்பவ இடத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மாதுலிகா உட்பட 13 பேர் உடல் கருகி உயிரிழந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

எனினும் மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட கெப்டன் வருண் சிங் விபத்து இடம்பெற்று ஏழு நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கெப்டன் வருண் சிங்கும் உயிரிழந்தார்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version