இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கருத்தாடலில் கலந்துகொண்ட, எலோன் மஸ்க் அனைத்து “X” கணக்கு வைத்திருப்பவர்களிடமிருந்தும் மாதந்தோறும் கட்டணம் அறவிட எதிர்பார்பதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு செய்வதன் மூலம் போலி கணக்குகளை பராமரிப்பதை கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக வலையமைப்பைப் பயன்படுத்துபவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாந்தம் செலுத்த வேண்டியிருந்தால், போலி கணக்குகளைப் பராமரிப்பவர்கள் படிப்படியாக குறைவடைவார்கள் என டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைவரான எலன் மஸ்க் மேலும் தெரிவித்துள்ளார்.
இப்போதைக்கு, X கணக்கு வைத்திருப்பவர்களிடம் பணம் எதுவும் அரவிடப்படுவதில்லை எனினும், அதன் பயனர்கள் எக்ஸ் பிரீமியத்தில் கட்டணம் செலுத்தி இணையலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.