சுகாதார அமைச்சர் கோடிக்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டும்

இலங்கை அரசாங்கத்தின் சுகாதர அமைச்சர் கெஹலிய ரம்புக்வல கொழும்பில் குடியிருக்கும் வீட்டுக்கான மின்சார கட்டணம் 12,056,803.38. ரூபா செலுத்த வேண்டுமென இலங்கை மின்சாரசபை கடிதம் மூலமாக அறிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு முதல் அவர் குடியிருக்கும் சரண வீதியில் அமைந்துள்ள வீட்டுக்கே இவ்வாறு மின்கட்டணம் செலுத்தவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பமர் மாதம் இலங்கை மின்சாரசபையினர் அமைச்சரின் வீட்டுக்கு நேரடியாக விஜயம் செய்து அவரது மனைவிடையுடன் இந்த விடயம் குறித்து கலந்துரையாடியதாகவும், இலங்கை மின்சாரசபையின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் 11 ஆம் திகதி குறித்த தொகையினை கட்டுமாறு கடிதம் அனுப்பப்ட்டுள்ளதாகவும் ஆனால் இதுவரை அது செலுத்தப்பபடவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில் உடனடியாக நிலுவையினை செலுத்துமாறும், மின் இணைப்பை அமைச்சர் கெஹலிய ரம்புக்வலவின் பெயருக்கு மாற்றுமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கோடிக்கு மேல் மின் கட்டணம் செலுத்த வேண்டும்

Social Share

Leave a Reply