இந்தியா, ரஞ்சி கிண்ண போட்டியில் பரோடா அணி வீரர் விஷ்ணு சொலங்கி தன்னுடைய மகளை இழந்த சோகத்துக்கு மத்தியிலும் சதமடித்து தனது அணிக்கான முன்னிலை ஓட்டங்களை பெற்று பலரது பாராட்டையும் பெற்றுள்ளார்.
கனமான மனநிலையிலும் அணியோடு இணைந்து விளையாடியது மட்டுமல்லாமல், சதமடித்தமை தொடர்பிலும் பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஷ்ணு சொலங்கி கடந்த 11 ஆம் திகதி தனது அணியுடன் போட்டிக்காக கட்டாக்கில் இருந்த போது பெண் குழந்தை பிறந்து 24 மணி நேரத்துக்குள் இறந்துவிட்டது.
இந்த நிலையில் விஷ்ணு குழந்தையின் இறுதி சடங்கில் பங்குபற்றி விட்டு மீண்டும் கடந்த 24 ஆம் திகதி ஆரம்பித்த சண்டிகார் அணிக்கெதிரான போட்டியில் பங்குபற்றியுள்ளார். நேற்றைய தினம்(25.02) சதமடித்த விஷ்ணு இன்று மேலும் 01 ஓட்டத்தை பெற்று 104 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார்.
