யுக்ரைன் போரினால் இலங்கைக்கன பாதிப்பு

யுக்ரைன் மீது ரஸ்சியா மேற்கொண்டுள்ள போரினால் இலங்கைக்கு பொருளாதர பாதிப்புகள் ஏற்படுமென வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியிலுள்ள இலங்கைக்கு இந்த போர் தலையிடியினை குடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த போரின் காரணமாக தேயிலை ஏற்றுமதியிலும், ஒயில் இறக்குமதியிலும் பாதிப்புகள் ஏற்படுமென வெளியுறவு துறை அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். இலங்கை தேயிலை ஏற்றுமதியில் அதிக பங்கு யுக்ரைனுக்கும், ரஸ்சியாவுக்குமே ஏற்றுமதி செய்வதாக தெரிவித்துள்ள அவர், இந்த போரினால் தேயிலை ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்படும் வாய்ப்புகளுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.

ஒயிலினை யுக்ரைனிலிருத்து இறக்குமதி செய்யமுடியாமல் போனால், வேறு இடங்களில் கொள்வனவு செய்யும் நிலை ஏற்படுமெனவும், அதற்கு அதிக டொலர் தேவை ஏற்படும் நிலை உருவாகுமெனவும் தெரிவித்துள்ள வெளியுறவு செயலாளர், டொலர் தட்டுப்பாட்டுக்கு மத்தியில் இலங்கைக்கு நெருக்கடியினை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வர ஆரம்பித்ததன் மூலமே இலங்கை பொருளாதாரம் மீள ஆரம்பித்தது. வெளிநாட்டு சுற்று பயணிகளில் அதிகமானவர்கள் கொரோனாவின் பின்னர் ரஸ்சியா மற்றும் யுக்ரைனிலிருந்தே அதிகமாக வருகை தந்திருந்தனர். ஆனால் அந்த நாடுகளிலிருத்து வருபவர்களது அளவு குறைவடையும் அபாயமுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ரஸ்சியா இலங்கையுடன் வர்த்தக உறைவை கொண்டுள்ள நாடு. அமெரிக்கா நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் ரஸ்சியா மீது பொருளாதார தடையினை இட்டுள்ளதனால் இலங்கையின் வர்த்தக துறை பாதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே மேலும் கூறியுள்ளார்.

யுக்ரைன் போரினால் இலங்கைக்கன பாதிப்பு

Social Share

Leave a Reply