மத்திய வங்கி ஆளுநர் உலகத்தையே முட்டாளாக்குகிறார் – ஹர்ஷ டி சில்வா

இலங்கையில் நிலவும் டொலர் பிரச்சினையில் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்த உலகத்தையே முட்டாளாக்க முனைவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

“மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் பெப்ரவரி 9 ஆம் திகதி பத்திரிகைகளுக்கு எங்களுக்கு டொலர்களுக்கு பஞ்சமில்லை என்று கூறியிருந்தார்.அதுதான் அந்த மனிதன் எப்பொழுதும் சொல்வதற்கு தலைகீழாகவே அனைத்தும் நடக்குகின்றன.

இன்றைய நாளிதழில்களில் மத்திய வங்கியால் டொலர்களை உருவாக்க முடியாது என்று சொல்லியுள்ளதாக பார்க்கமுடிகிறது. இந்த மனிதனுக்கு இந்த மனிதன் சொல்வது என்னவென்று புரியவில்லையா அல்லது முழு இலங்கையையும், உலகத்தையும் முட்டாளாக்கப் பார்க்கிறாரா?” என எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (02.03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறான ஓர் நிலை ஏற்படும் என நான் 2020 நவம்பரில் பாராளுமன்றத்தில் கூறியதாகவும், கடனை மறுசீரமைக்காவிட்டால் அது பெரிய அதல பாதாளத்திற்கு செல்லுமென கூறியதாகவும் தெரிதவித்த ஹர்ஷ டிசில்வா,
“இந்தப் பணியைத் தொடர முடியாது.இந்தப் பயணம் தவறானது. கடனை மறுசீரமைக்கச் சொன்னோம்., நாட்டில் தலைதூக்கியுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க அதுவே சிறந்த வழி என்று சொன்னோம். கடனை 36 மாதங்களுக்கு ஒத்திவைக்கச் சொன்னோம். ஆனால் இறுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே இந்த அனைத்து பொறுப்புகளையும் செய்வதாக பெறுபோற்று தட்டிக்கழித்தார்.

தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது அணியை ஒன்றிணைத்து இந்த கேள்விகளுக்கு விடை காண வேண்டும்.எதிர்க்கட்சிகள் உதவவில்லை என்கிறார்கள்.இந் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் நன்றாக புரிந்துள்ளனர்.பாராளுமன்றத்தில் பல முறை இது குறித்து போசினோம்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஊடகவியலாளர் சந்திப்பில் கூறிய மேலதிக விடயங்கள் கீழுள்ளன

“அமைச்சர் உதய கம்மன்பில கப்ராலுக்கு பந்தை அனுப்புகிறார்.கப்ரால் உதய கம்மன்பிலவுக்கு பந்தை அனுப்புகிறார்.நாங்கள் இப்பிரச்சினையை ஆராய்ந்து கருத்துக்களை முன்வைத்த போது எங்களை அவமதிப்புடன் பார்த்தார்கள். எங்களைப்பார்த்து சிரித்தார்கள்.ஜனாதிபதியால் அமைச்சரவை கூட்ட முடியாது.தாறுமாறான கதைகளையே கேட்க வேண்டியுள்ளது. டீசலுக்கும் பெட்ரோலுக்கும் நாடு முழுவதும் மக்கள் வரிசைகளில் நிற்கின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் வார நாட்களில் ஏழு எட்டு மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்கும் போக்கு இல்லை என அரசாங்கத்தால் கூறமுடியாது. 150 மில்லியன் தேவை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.நாம் உலக கடனை அடைப்போம் என்றார்கள்.இன்று வீட்டிற்கு சென்றே கடனை அடைப்போம் என்றாகியுள்ளது. என்ன நகைச்சுவை என்று பாருங்கள், இந்த குழப்பத்திற்கு இந்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் குற்றவாளிகள் இல்லையா?

தனிநபர்களை உள்ளடக்கிய குழுவே தற்போதைய பொருளாதார கொள்கையால் பெரும் பலன்களைப் பெறும் என்று நாம் பல முறை கூறினோம். சிலர் டொலரில் கணக்கிட்டு ஆண்டு வருமானத்தில் 100%க்கும் அதிகமான தொகையை டொலர்களில் எடுத்தனர்.ஒவ்வொரு பேரிடரிலும் இந்த அரசாங்கம் யாரை திருடியது என்பதும், இந்த பாரிய நெருக்கடிக்குள் பல பில்லியன் டொலர்கள் பலன் பெற ஒரு குழு இந்த அரசாங்கத்திற்குள் ஒழிந்துள்ளதா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

டீசல் இல்லை, மின்சாரம் இல்லை, காய்கறிகள் கொண்டு வர லொரிகள் இல்லை, அரிசி ஆலைகளை இயக்க மின்சாரம் இல்லை, குளிர்சாதன பெட்டியில் மீன் வைக்க முடியாது.இருபத்தி இரண்டு மில்லியன் மக்களும் இன்று நாட்டில் மிகவும் துயரத்தில் உள்ளனர். மருத்துவமனஐகளுக்கு ஜெனரேட்டர்கள் இல்லை,மருந்து இல்லை,சத்திரசிகிச்சை கருவிகள் மற்றும் தோவையான மருந்துகள் இல்லை.இது வக்குரோத்து இல்லையா?

எனவே கடவுளின் பெயரால் நாங்கள் சொல்வதைக் கேட்குமாறு அரசாங்கத்திடம் சொல்கிறோம்.நாங்கள் மக்களின் எதிர்க்கட்சி, நாங்கள் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 52 இலட்சம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

இது ஜனநாயகம் அல்ல.எதற்கு எதிர்க்கட்சி?இன்னும் மக்களை சிரம்ப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். ஐ எம் எப் இன் ஆதரவை கோருங்கள்.அது சார்ந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பியுங்கள். இலங்கையில் சொல்லப்படும் இந்த விசித்திரக் கதைகளை உலகில் யாரும் நம்பத் தயாராக இல்லை.

நாட்டிற்கு கடன் வழங்குவதா இல்லையா என்பதை IMF தனது உத்தியோகபூர்வ அறிவிப்பை நாளை வெளியிடும்.கடன் வழங்குவது நிலையானதாக இல்லை என்றால் இன்று நாம் உலகத்தின் முன் வெட்கப்பட வேண்டியிருக்கும் என தெரிவித்தார்.

மத்திய வங்கி ஆளுநர் உலகத்தையே முட்டாளாக்குகிறார் - ஹர்ஷ டி சில்வா

Social Share

Leave a Reply