நாளையும் 7 1/2 மணித்தியால மின் வெட்டு

இன்று மின் வெட்டு அமுல் செய்யப்பட்டது போல நாளையும்(03.03) 7 1/2 மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல் செய்யப்படுமென பொது சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இன்று அமுல் செய்த அட்டவணையின் படியே நாளைய தினமும் மின் வெட்டு இடம்பெறுமென பொது சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மின்தடை தொடர்பில் தீர்வை பெற்று தருவதாக தெரிவித்துள்ளார் என பொது சேவைகள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று காலை தெரிவித்திருந்த நிலையிலும் போதிய எரிபொருள் இலங்கை மின்சாரசபைக்கு கிடைக்காத நிலையில் மின் தடை தொடர்கிறது.

மின் தடை காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றன. பலரது தொழில்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன.பல தொழில் நிறுவனங்கள் மின் தடை காரணமாக மூடப்பட்டுள்ளன.

பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு கஷ்டப்படும் நிலையில் இந்த மின் தடையானது மேலும் மக்களுக்கு பொருளாதார நெருக்கடியினை ஏற்படுத்தி வருகிறது.

மின் தடைக்கான அட்டவணை

நாளையும் 7 1/2 மணித்தியால மின் வெட்டு

Social Share

Leave a Reply