ஒன்லைன் வகுப்பு தொடர்பில் அச்சுறுத்தினால் பொலிசில் முறையிடவும்

ஒன்லைன் கற்பித்தல் நடவடிக்கைளை முன்னெடுக்கும் ஆசிரியர்களை யாராவது கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என அச்சுறுத்தினால் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
பொதுசேவைகள் அமைச்சர் பொலிஸ் மா அதிபருக்கும், குற்றப்புலனாய்வு உதவி பொலிஸ் மா அதிபருக்கும் இது தொடர்பில் அறிவுறுத்தியுள்ளதாகவும், அவ்வாறு அச்சுறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
119 மூலமாக அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடலை மாணவர்களுக்கான ஒன்லைன் கற்பித்தலுக்கு,பாடசாலை ஆசிரியர்களுக்கு இடையூறு வழங்குபவர்களுக்கே இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை யாரும் தடுக்க அல்லது அச்சுறுத்த முயற்சிக்கலாம் என்ற அடிப்படையிலேயே இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுளளதாக எமது இணையம் சந்தேகிக்கிறது.

ஒன்லைன் வகுப்பு தொடர்பில் அச்சுறுத்தினால் பொலிசில் முறையிடவும்

Social Share

Leave a Reply