இலங்கையின் மூத்த பிரஜை காலமானார்

இலங்கையின் வயது கூடிய மூதாட்டி இன்று காலை உலகை விட்டு பிரிந்துள்ளார். 1906 ஆம் ஆண்டு பிறந்த கங்கனம் கமகே டினிகாமி, தனது 116 வயதில் இன்று காலமானார்.

மாத்தறை, கனன்கே என்ற இடத்தில வசித்து வந்த மூதாட்டியே இன்று காலமானார். இரண்டு ஆண் பிள்ளைகளினதும், ஒரு பெண் பிள்ளையானதும் தாயான இவர் 1982 ஆம் ஆண்டுக்கு பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

40 வருடங்களுக்கு முன்னர் இவரது கணவர் இறந்துள்ளார். நாளைய தினம் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளன.

இலங்கையின் மூத்த பிரஜை காலமானார்
Photo Credit – Daily Mirror

Social Share

Leave a Reply