சர்வதேச நாணய நிதியம் இலங்கை வருகிறது

சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பிரமுகர்கள் இலங்கை வரவுள்ளனர். இவர்கள் வரும் திங்கட் கிழமை மற்றும் செய்வாய்க்கிழமைகளில் இலங்கையில் சந்திப்புகளில் ஈடுபடவுள்ளனர். திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வருகை தரவுள்ள சிரேஷ்ட அதிகாரிகள் சந்திக்கவுள்ளனர்.

இந்த சந்திப்பில் இலங்கையின் தற்போதைய நெருக்கடியான பொருளாதரம் குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீடு தொடர்பில் ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.

இலங்கை மத்திய வங்கியிடம் 2.31 பில்லியன் டொலர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் எரிபொருள், மருந்துகள், உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் நிலைகளை எதிர்கொண்டு வருகிறது.

இலங்கையின் பொருளாதர நெருக்கடி தொடர்பிலும், வெளிநாட்டு கடன்களை மீள செலுத்துவது தொடர்பிலும் அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசு உத்தியோகபூர்வ கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளது. இவ்வாறான நிலையிலேயே சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் இலங்கை வரவுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கை வருகிறது

Social Share

Leave a Reply