எரிபொருள் விநியோகம் நிறுத்தம்

எரிபொருள் விநியோகத்திலிருந்து எரிபொருள் காவி வண்டிகள் விலகியுள்ளன. தங்களுக்கு 60 சதவீத கட்டண அதிகரிப்பு வழங்கினால் மட்டுமே சேவைகளில் ஈடுபடுவோம் என இரண்டு நாட்கள் அவகாசத்தை எரிபொருள் காவி வண்டிகள் சங்கம் அறிவித்திருந்தது.

அவர்களுக்கான கட்டண அதிகரிப்பு வழங்கப்படாத நிலையில் நள்ளிரவு 12 மணிமுதல் எரிபொருள் விநியோகத்திலிருந்து அவர்கள் விலகியுள்ளனர். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விநியோகத்துக்காக 800 தனியார் காவு வண்டிகள் பாவிக்கப்படுகிறன்றன.பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு 70-80 வண்டிகள் மட்டுமே காணப்படுவதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது .

14 ஆம் திகதி பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக்கு கடிதம் மூலமாக இந்த விடயம் அறிவிக்கப்பட்டதாக சங்கம் மேலும் தெரிவித்த அதேவேளை இதுவரை எந்த பதிலும் கிடைக்காத நிலையில் எரிபொருள் விநியோகத்திலிருத்து விலகியுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் நிலையில், இவ்வாறு காவி வண்டிகள் விநியோகத்திலிருத்து விலகியிருப்பது, எரிபொருள் விநியோகம் சீராகி வந்த நிலையில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விநியோகம் நிறுத்தல் காரணமாக வீதிகளில் இன்று காலை முதல் வாகனங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக வரிசையில் நிற்பதனை பார்க்க முடிந்தது.

தொடர்புடைய செய்தி

எரிபொருள் விநியோகம் நிறுத்தம்

Social Share

Leave a Reply