இந்தியா இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்த 1 பில்லியன் டொலர் கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்று வியாழக்கிழமை பிற்பகல் பசில் ராஜாக்ஷ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அறிய முடிகிறது. இந்திய அரச வங்கியோடு நிதியமைச்சர் கையெழுத்திட்டுளளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் அதிகரித்து வரும் சீனாவின் உறவை முறியடிக்கும் வகையில் இந்தியா இலங்கைக்கு இந்த உதவியினை வழங்குவதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியா நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மற்றும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்ததன் பின்னர் கையொப்பமிடடதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள், மருந்து, அத்தியாவசிய பொருட்கள் கொள்வனுக்காக இந்த 1 பில்லியன் டொலர்கள் இந்தியா அரசாங்கத்தினால் கடனாக வழங்கப்படுகிறது.
இந்த பணப்பெறுமதி இலங்கைக்கு வருவதனால், டொலர் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்படுமா, பொருட்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படுமா என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எது எப்படியோ அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவுள்ளன என்பது மக்களுக்கு மகிழ்ச்சியே.