தமிழர் விடுதலை கூட்டணியின் பொதுக்குழு கூட்டம் இம்மாதம் 19 ஆம் திகதி நடாத்தப்படவிருந்தது. இருப்பினும் அந்த கூட்டம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரியினால் பிற்போடப்பப்ட்ட நிலையில் குறித்த கூட்டத்துக்கு கிளிநொச்சி நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியுள்ளதாகவும் அறிய முடிகிறது.
இது தொடர்பில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரியினை தொடர்பு கொண்ட கேட்டபோது சில தயார்படுத்தல் செய்ய வேண்டிய நிலை காணப்படுவதனால் கூட்டம் பிற்போடப்பட்டதாகவும், நீதிமன்றத்தில் யாரோ தடையுத்தரவை பெற்றிருப்பதாகவும் அறிய முடிந்துள்ளதாகவும், இதுவரை தனக்கு நீதிமன்றத்தின் தடையுத்தரவு கிடைக்கவில்லையெனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
01 வார காலத்தில் மீண்டும் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுளளதாகவும், நீதிமன்ற உத்தரவு தனக்கு கிடைத்ததும் அது தொடர்பில் ஆராய்ந்து அதற்கான நடவடிக்கைளை எடுக்கவுள்ளதாகவும் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வி மீடியாவுக்கு தெரிவித்தார்.
கட்சியின் அங்கத்துவம் கூட இல்லாதவரினால் இவ்வாறான தடையுத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும், யார் எவர் என்று தெரியாதவர்கள் எல்லாம் கட்சியினை கைப்பற்ற முயற்சிப்பதாகவும், தான் உயிரோடு இருக்கும் வரை அதற்ககான வாய்ப்புகள் இல்லையெனவும் மேலும் அவர் தெரிவித்தார்.
50 வருடங்களுக்கு மேலாக தந்தை செல்வாவின் காலத்திலிருந்து இரதம் சிந்தி உழைத்து வரும் நிலையில், இவ்வாறான ஏமாற்றுக் காரர்களினால் கட்சியினை அபகரிக்க திட்டம் போடுவது மக்களை ஏமாற்றும் செயலெனவும், அதற்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டேன் எனவும் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி தெரிவித்தார்.